டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. வங்கதேசத்துக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் விராட் கோலி சிறப்பாக ஆடிவருகிறார். இன்று அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் 16 ரன்கள் அடித்தபோது, டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.

டி20 உலக கோப்பையில் 1016 ரன்களை குவித்த இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே தான் முதலிடத்தில் இருந்தார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் அடித்தபோது டி20 உலக கோப்பையில் 1017 ரன்களை எட்டி டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் (965 ரன்கள்) 3ம் இடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா 921 ரன்களுடன் 4ம் இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா அவரது வழக்கமான அதிரடி இன்னிங்ஸ்கள் சில ஆடினால் விராட் கோலியை பின்னுக்குத்தள்ள வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக