ஹிந்து, சீக்கியர், புத்த, ஜெயின், கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த இவர்களுக்கு, இந்திய குடியுரிமை சட்டம், 19௫௫ன் கீழ் குடியுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குடியுரிமை சட்டத்துக்கும், 2019ல் அறிவிக்கப்பட்ட, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த இரண்டு சட்டங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், 2019ல் அறிவிக்கப்பட்ட சட்டம் இன்னும் சட்ட வரைவாக்கப்படவில்லை. இந்த சட்டத்தின் கீழ் யாருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவும் இல்லை. குஜாரத்தின் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு மட்டுமே, 1955ம் ஆண்டு சட்டத்தின் கீழ் தற்போது குடியுரிமை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
எனவே, இந்த இரண்டு மாவட்டங்களிலும் வசிக்கும் மேற்கண்ட மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர், அதிகாரிகளிடம் தகுந்த சான்றிதழ்களை அளித்து, இந்திய குடியுரிமைக்காக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக