"கற்றல் குறைபாடு" (LEARNING DISABILITY) - பெற்றோர்க்கு ஓர் விழிப்புணர்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 அக்டோபர், 2022

"கற்றல் குறைபாடு" (LEARNING DISABILITY) - பெற்றோர்க்கு ஓர் விழிப்புணர்வு.

photo_2022-10-24_23-09-03
குழந்தையை பெற்று பாலூட்டி, சீராட்டி, வளர்த்து பள்ளிக்கு போகும் பருவம் வந்ததும், ஒவ்வொரு பள்ளியாக ஏறி, இறங்கி, நல்லதொரு பள்ளியில் இடம் பிடித்து, தங்கள் பிள்ளையும் ஒரு நாள் மருத்துவராவோ, கலெக்டராகவோ, இஞ்ஜினியராகவோ வருவான் என்ற கனவுகளோடும், கண்களில் பெருமிதத்தோடும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கனவுகளோடு எதிர் நோக்கிக் காத்திருக்கும் பெற்றோர்களே.

உஷார் பெற்றோர்களே! கவனம்!! உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை உங்கள் கையில்! நிறையபெற்றோர்கள்" என் மகன் நன்றாக பேசுகிறான், விளையாடுகிறான் புத்திசாலிதனமாக கேள்விகளை கேட்கிறான். அவனுடைய கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை.அவனை பார்த்தால் எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் படிப்புமட்டும் தலையில் ஏற மாட்டேங்குது. அவனால் எழுத முடியவில்லை, வாசிக்கத் தெரியவில்லை, மனப்பாடம் செய்யமுடியவில்லை, கணக்கிடத் தெரியவில்லை, ஏன்?” எனக் கேட்பார்கள்.


Science%20Google%20Form%20Header

பெற்றோர்களின் இந்த புரியாத கேள்விகளுக்கு பதில் என்ன தெரியுமா? "கற்றல்குறைபாடு”.இது குழந்தைகளுக்கு இருக்ககூடிய ஒரு சிறிய குறைபாடு ஆகும். உங்கள் குழந்தைகளுக்கு, "கற்றல்குறைபாடு” பிரச்சனை இருக்கிறது என்று சொன்னால் எத்தனை பெற்றோர்கள ஏற்றுக் கொள்கிறார்கள் ஒருவரும் இல்லை. ஏற்றுககாள்ளமனம் இல்லாத பெற்றோர்களால் எத்தனையோ குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.


முதலில் கற்றல் குறைபாடு என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளலாம். “கற்றல் குறைபாடு” என்பது மிகவும் நுணுக்கமான பிரச்சனைஆகும். இப்பிரச்சனை அவ்வளவாக வெளித்தெரிவதில்லை. இதற்கு வெளிப்படையான அறிகுறிகள் என்று ஒன்றும் கிடையாது. அதனால்தான் நிறைய பெற்றோர்கள் ஏமாந்து குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விடுகிறார்கள்.

photo_2022-10-24_23-09-07பெற்றோர்களே! இவ்வளவு நாள் எப்படியோ? இனியும் வேண்டாம் உங்கள் குழந்தைக்கு இந்த அவலநிலை. உங்கள் குழந்தைக்கு கற்றல் குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால் அதற்குரிய சிறப்பு பயிற்சியை அளியுங்கள் .உங்கள் குழந்தையின் வாழ்வு சிறக்கட்டும்.


கற்றல் குறைபாட்டை இரு வகையாக பிரிக்கலாம்

  1. பிறவிக் கற்றல் குறைபாடு
  2. சூழ்நிலைக் கற்றல் குறைபாடு


1. பிறவிக் கற்றல் குறைபாடு.

பிறவியிலேயே ஏற்படும் இந்த கற்றல் குறைபாடு மத்திய நரம்புமண்டல பாதிப்பினால் ஏற்படுவாதாகும். அதை குணப்படுத்துவது சிறிது கடினம், தீவிர பயிற்சியளிப்பதால் இதனுடைய தீவிரத்தை குறைக்க இயலும்.


2.  சூழ்நிலை கற்றல் குறைபாடு

பள்ளி செல்லும் காலங்களில் சரியான கற்றல் சூழல் இல்லாமை, கற்கும் வசதி, வாய்ப்புகள் குறைவாக இருப்பது. கற்றலின் தூண்டுதலோ, ஊக்குவித்தலோ அகப்படாமை போன்ற காரணங்களால் இவ்வகை கற்றல் குறைபாடு ஏற்படுகிறது. இவ்வகை கற்றல் குறைபாடு சிறப்பு பயிற்சி அளிப்பதன் மூலம் நீக்கி விடலாம்.


"கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு, நார்மல் குழந்தைகள் படிக்கும் சி.பி.எஸ்.இ, மெட்ரிக் பள்ளிகள் போதுமானதாக இருக்காது. இவர்களுக்கு நார்மல் குழந்தைகளுக்கு கற்பிப்பது போல, கற்பிக்க முடியாது. சிறப்பு பள்ளியில் முறையான ஊக்குவிப்போடு பயிற்சி அளித்தால் மட்டுமே நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.


"கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். இந்த குழந்தைகளை முறையாக மதிப்பீடு (Assessment) செய்து அக்குழந்தைகளின் திறன்களை கண்டறிந்து அதற்கேற்ப கற்பிக்க வேண்டும்.


பெற்றோர்களே! உஷார்!! "எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள். அவர்களை ஏன் சிறப்பு பள்ளியில் சேர்க்க வேண்டும்?" என்று கேள்விக்குறியோடு இருக்கும் பெற்றோர்களே! கவனம் உங்கள் குழந்தைகள் எதிர்கால வாழ்க்கை உங்கள் கையில் பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவீர்.


உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால் உங்களுக்கு வைரஸ், காய்ச்சல், டைபாய்டு, மலேரியா காய்ச்சல் என்று பரிசோதித்து சொல்கிறார்கள். உடனே அதற்கான சிகிச்சை செய்கிறோம். ஆனால் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு "கற்றல் குறைபாடு" இருக்கிறது என்று சொன்னால் மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.


பெற்றோர்களே! "கற்றல்குறைபாடு” உடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டுதான இந்த கட்டுரையை (Article) எழுதுகிறேன்.மற்றபடி உங்களின் மனதை புண்படுத்துவதற்காக அல்ல. பெற்றோர்களே! இந்த கட்டுரையை  படித்துப் பார்த்து சிந்தித்து யதார்த்தமாக செயல்பட்டு உங்கள் குழந்தையின் வாழ்க்கையை வளமாக்குங்கள். தங்கள் குழந்தைகளை அவர்களுக்கான வாருங்கள்!உங்களை அன்புடன் அரவணைத்து உங்களுக்கான பயிற்சியை அளித்து அவர்கள் வாழ்வை வளமாக்குகிறோம்!!.


தொடர்புக்கு : K. பாரதியார் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பயிற்சி பள்ளி மற்றும்  K. பாரதியார் கற்றல் குறைபாடு மையம். 95975 73350, 86678 96882, 99448 13918. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad