மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட மழை நீர் வடிகால் மற்றும் புதியதாக அமைய இருக்கின்ற நகராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றை நகராட்சி இயக்குனர் திரு.பொன்னையன்., I.A.S அவர்கள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு எவ்வித இடஞ்சலும் இல்லாமல் பாதுகாப்புடன் பணிகளை நடப்பதை உறுதி செய்து கொண்டு அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உடன் மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன் மற்றும் மாங்காடு நகர கழக செயலாளரும் நகர மன்ற துணை தலைவர் மனித நேயர் பட்டூர் எஸ் ஜபருல்லா அவர்கள் மாங்காடு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாங்காடு நகராட்சி ஆணையர் திருமதி.ரா.சுமா அவர்கள் நகராட்சி பொறியாளர் திருமதி நளினி அவர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர் முருகன் டி பெருமாள்ராஜ் வில்லியம்ஸ் ஹபீபுர் ரஹ்மான்.ஞானவேல்.. ராம்பியாரி ஆகியவர்கள் ஆய்வின் போது கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் செய்தியாளர் மாங்காடு பாலாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக