கலிபோர்னியா: லட்ச கணக்கான ஃபேஸ்புக் பயனாளர்களின் கடவுச்சொல்லை நூற்றுக்கணக்கான மொபைல் செயலிகள் களவாடி வருவதாக மெட்டா நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அன்றாட பயன்படுத்தும் சமூக வலைதள செயலிகள் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது.
இந்நிலையில், கூகுல் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஆப்ஸ் ஸ்டோர் உள்ளிட்டவைகளில் கிடைக்கும் செயலிகளை ஃபேஸ்புக் பயனாளர்களின் கடவுச்சொல்லை களவாடி வருவதாக மெட்டா நிறுவனம் கண்டறிந்திருக்கிறது.
10 லட்சத்திற்கு மேற்பட்ட பயனாளர்களை கடவுச்சொல் களவாடபட்டிருப்பதாக கூறும் மெட்டா நடப்பாண்டு மட்டுமே இதுவரை 400-க்கும் மேற்பட்ட ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
மேலும், இந்த செயலிகள் போட்டோ எடிட்டிங், கேம், விபிஎன் சேவைகள் மற்றும் இன்னும் பிற பயன்பாட்டிற்காக பயனர்கள் பயன்படுத்தி வருபவை என்றும் மெட்டா தெரிவித்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக