காய்கறி கடையில் மத்திய நிதி அமைச்சர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

காய்கறி கடையில் மத்திய நிதி அமைச்சர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை மயிலாப்பூரில் உள்ள இரவு நேர காய்கறி கடைக்கு நேரில் சென்று காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்கியதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று இரவு அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள இரவு நேர காய்கறி மார்க்கெட் திடீரென்று சென்றார். ஒவ்வொரு காய்கறி கடையாக சென்ற அவர் ஒரு கடையில் நின்று தனக்குத் தேவையான காய்கறிகளை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து தேர்வு செய்து வாங்கினார்.


பின்னர் அவர் அங்கிருந்த காய்கறி கடை உரிமையாளர்கள் தொழிலாளர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் எம் எல் ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். மத்திய நிதி அமைச்சராக இருந்தாலும் காய்கறி வாங்கும் போது பெண் தானே என்று காய்கறி கடைக்கு வந்த அமைச்சரை அங்கிருந்த பெண்கள் பார்த்து கமெண்ட் அடித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad