அந்தர் பல்ட்டி அடித்த எச். ராஜா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

அந்தர் பல்ட்டி அடித்த எச். ராஜா.

வீட்டில் வளர்த்த நாயை அடித்து கொன்றதாக ட்விட்டரில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பதிவு செய்திருந்தார்.ஆனால் அதெல்லாம் சும்மா என்று தற்போது அந்த பல்ட்டி அடித்துள்ளார்.


பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக விளங்கி வரும் எச் ராஜா, சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர், அவர் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அந்தப் பதிவில் தங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை வளர்த்ததாகவும் அதற்கு வெறிபிடித்ததால் நாய் பிடிப்பவரை வரவழைத்தோம் அவர் மூங்கில் குச்சியால் ஒரு போடு போட்டார். நாய் இறந்தது என்று பதிவு செய்திருந்தார்.


இந்தப் பதிவை பார்த்த சிலர் இது குறித்து விலங்குகள் நல வாரியத்திற்கு புகார் மனு அனுப்பினர். இப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு குறிப்பானை அனுப்பப்பட்டுள்ளது.


தற்போது இது குறித்து எச் ராஜா கூறும்போது, அதெல்லாம் சும்மா இந்து மதம் குறித்து சிலர் தரக்குறைவாக பேசுகின்றனர், அவர்களுக்கு என் பாணியில் பதிலடி கொடுத்தேன் அவ்வளவுதான் நாயாவது வளர்க்கவாவது என்று அந்த பல்டி அடித்து ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad