கோவை மாநகராட்சி பள்ளியில் அனுமதியின்றி ஆர்.எஸ்.எஸ் பயிற்சியா?! - அதிகாரிகள் விசாரணை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

கோவை மாநகராட்சி பள்ளியில் அனுமதியின்றி ஆர்.எஸ்.எஸ் பயிற்சியா?! - அதிகாரிகள் விசாரணை

கோவை ஆர்.எஸ்.புரம், தேவங்கா மேல்நிலைப் பள்ளி சாலையில், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பயிற்சி நடந்தததாக தகவல் வெளியானது.

இதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. உடனடியாக காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு மாநகராட்சி அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ``இந்தப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. மாநகராட்சி பள்ளியிலேயே சட்டவிரோதமாக ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெறுவது கண்டிக்கத்தக்கது.

பல மாதங்களாக இதுத்தொடர்ந்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதைக் கண்டித்து சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.” என தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பயிற்சி அளித்ததாக வந்தப் புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கல்வி அலுவலர் உரிய விசாரணை செய்து வருகிறார்.

விசாரணைக்கு பின்னர் உரிய முடிவு செய்யப்படும். பயிற்சி அளிப்பதற்கு எந்த அனுமதியும் மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad