நெல்லையில் ஒரே மாதத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 8 அக்டோபர், 2022

நெல்லையில் ஒரே மாதத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது


திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.     

அதே போன்று தடை செய்யப்பட்ட கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் வைத்திருந்ததாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஒரு மாதத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஈடுபட்டதாக 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலை, போதைவஸ்து என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/