ஹெல்மெட் போடாமல் எகிறிய போலீஸ்காரருக்கு 100ரூபாய் தான் அபராதம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

ஹெல்மெட் போடாமல் எகிறிய போலீஸ்காரருக்கு 100ரூபாய் தான் அபராதம்.

photo_2022-10-09_22-14-50
ஹெல்மெட் போடாமல் சக வாகன ஓட்டியை உரிமையில் பேசிய போலீஸ்காரருக்கு வெறும் ₹100 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் என ஆக்கப்பட்ட பிறகு காவல்துறையினர் ஆங்காங்கு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை நியு ஆவடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சக வாகன ஓட்டியான காவலரிடம் ஹெல்மட் அணியுமாறு கூறியுள்ளார். 


தன்னிடம் தலைக்கவசம் அணியுமாறு கூறிய வாகன இளைஞரை நிறுத்திய காவல் அதிகாரி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ பதிவில் இளைஞர் உங்கள் நல்லதுக்கு தானே சொன்னேன் எனக் கூறவும் அந்த காவலர், “நான் தான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல உனக்கு எதும் பிரச்சனையா. நான் ஹெல்மட் போடுவேன் போட மாட்டேன் உனக்கு என்ன பிரச்சனை? நீ ஹெல்மட் போட சொன்னது தப்பு தாண்டா போ”என கூறுகிறார். 


காவலர் சீருடையில் இருக்கும் அந்த காவலர் இளைஞரை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது., இது தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்ததில், அந்த காவலர் மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. அவர் மீது தலைக்கவசம் போடாமல் வாகனம் ஓட்டியதற்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர், தலைகவசம் அணியாமல் சென்றதற்கு மட்டுமே அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னை அவதூறாக பேசியது குறித்து எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்ற புலம்பலோடு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் ஒன்றையும் அனுப்பி உள்ளார்.


அதே நேரம் ஹெல்மெட் போடாத போலீஸ்காரருக்கு வெறும் ₹100 தான் அபராதமா என்று பொதுமக்கள் ஆதங்கத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad