10, 12ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த 125 மாணவர்கள் ஹெலிகாப்டர் பயணம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 8 அக்டோபர், 2022

10, 12ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த 125 மாணவர்கள் ஹெலிகாப்டர் பயணம்

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த 125 மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், மாநில அரசு சார்பில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

மாநில அளவில் மற்றும் மாவட்டங்கள் அளவில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள், ஏழு பேர் அமர்ந்து பயணிக்கும் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநில முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது.

மாநிலத்தில் முதல் முறையாக, முதலிடம் பிடித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று வந்து கௌரவிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக ஹெலிகாப்டரில் பயணித்துத் திரும்பிய மாணவர்கள், தங்கள் வாழ்நாளில் மிகச் சிறந்த அனுபவத்தை இன்றைய நாள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகக் கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/