வகுப்புவாதம், வன்முறை அடாவடி அரசியலை மட்டுமே மேற்கொண்டுவரும் கட்சியின் தலைவரிடமிருந்து இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துக்கள் தான் வெளிப்படும் என்பதை அண்ணாமலை நிரூபித்துள்ளார் என SDPI கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு, பாஜக தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலே காரணமாக இருக்க முடியும் என்கிற நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் குற்றச்சாட்டுக்கு, பதில் என்கிற பேரில் மிகவும் தரம் தாழ்ந்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆணவப் பேச்சு கண்டிக்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக