தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் தஞ்சை மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் திரு.ப. ஹரிஹரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சை மீனாட்சி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானபாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேஷ், மாவட்ட அமைப்பாளர் முனியசாமி, பொருளாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் லைன். பிரபாகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். சங்கத்தின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை பணிகளை விரைந்து மேற்கொள்வது, தமிழக பத்திரிகையாளர் சங்க அலுவலகத்திற்கு அரசு கட்டிடம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பது, சங்கத்தை வலுப்படுத்தும் வகையில் மாவட்ட முழுவதும் உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் சங்கத்தின் சட்ட விதிகளை மீறி செயல்பட்ட நமது சங்க உறுப்பினர் வசந்தரா வை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக