ஆர்யா ராஜேந்திரன், கேரளாவின் இளம் எம்எல்ஏ. வான கோழிக்கோடு பாலுச்சேரி எம்எல்ஏ. சச்சின் தேவ் (28) ஆகியோர் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து, அதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தனர்.
இருவரும் கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் நேற்று ஆர்யா ராஜேந்திரன்-சச்சின்தேவ் திருமணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமை அலுவலகமான ஏ. கே. ஜி. மையத்தில் எளிமையாக நடந்தது.
இதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர், திருமண விழாவிற்கு பரிசு எதுவும் கொண்டு வர வேண்டாம் என்று மேலும் அதை மீறி வழங்க விரும்புபவர்கள் முதியோர் இல்லத்திலோ, மாநகராட்சிக்கோ அல்லது முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கோ வழங்கலாம் என்று அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக