நெல்லை திமுக எம்பி மகன் மீது கனிம வள கடத்தல் வழக்கு பதிவு, இரண்டு லாரிகள் பறிமுதல். நெல்லை போலீசார் அதிரடி
குமரி மாவட்டத்தில் கனிம வள கொள்ளை மற்றும் கடத்தல் அதிகமாக நடத்து வருவதாக கடந்த நான்கு நாட்களாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
கனிம வள கொள்ளையை படம்பிடிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் பொதுமக்கள் கனிம வள மாஃபியா கும்பல்களால் மிரட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது. குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள கடத்தல் லாரிகளை தடுக்க நேர்மையான காவல் அதிகாரிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் விதத்தில் நெல்லை மாவட்டத்தில் நேர்மையான காவல் அதிகாரிகள் உள்ளனர் என்று நிரூபிக்கும் வகையில் திமுக எம்பி ஞான திரவியத்தின் மகன் தினகரன் கிராவல் மண் கடத்தியதாக அவரது இரண்டு கனரக டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் திரவியத்தின் மகன் தினகரன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அதிசய நிகழ்வாகவே பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு பேச்சாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வழியே கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வள கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் திரவியம் தொடர்புடைய கனரக டாரஸ் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வருவதாகவும் ஆனால் குமரி மாவட்ட காவல்துறையினர் கண்டு கொள்வது இல்லை என்றும் கடந்த ஒரு வருடமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
குறிப்பாக குமரி மாவட்டத்தில் உள்ள போலீசார் நெல்லை எம்பி தொடர்புடைய கனிம வள கடத்தலில் ஈடுபட்ட கனரக டாரஸ் லாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கனிம வள கடத்தலுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் நேர்மையான ஒரு சில போலீசார் நெல்லை மாவட்டத்தில் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் விதமாக கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டதாக இரண்டு டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்து விசாரித்த போது அந்த வாகனங்கள் நெல்லை மாவட்ட திமுக எம் பி ஞான திரவியத்தின் மகன் தினகரனின் டாரஸ் லாரிகள் என்பதை அறிந்த பின்னரும் வழக்குப் பதிய தயங்காமல் துணிச்சலுடன் எம் பி மகன் மீதே வழக்கு பதிவு செய்து அவரது இரு கனரக டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்துள்ளதாக வெளியான செய்தியின் மூலம் கனிம வள திருட்டில் காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற காவல்துறையின் மீது இருந்த களங்கம் சிறிது அளவு துடைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பதவி அதிகாரங்களுக்கு தலைகுனியாமல் நேர்மையாக செயல்பட்டு கனிமவள கடத்தல்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நெல்லை மாவட்டத்தில் மட்டுமல்ல குமரியிலும் நேர்மையான காவல் அதிகாரிகள் உள்ளனர் என்பதை நிலைநாட்ட முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக