நன்னடத்தை அடிப்படையில் மேலும் 75 கைதிகள் விடுதலை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

நன்னடத்தை அடிப்படையில் மேலும் 75 கைதிகள் விடுதலை.

IMG_20220925_093337_907

தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன.

 

அந்த வகையில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
 

நீண்ட காலம் சிறைகளில் இருக்கும் கைதிகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி கைதிகள் தேர்வு செய்யப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர்.


தமிழக அரசின் உத்தரவின்படி ஏற்கனவே சுதந்திர தினத்தையொட்டி 70 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 10 சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

அதிகபட்சமாக மதுரை மத்திய சிறையில் இருந்து 22 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை புழல் சிறையில் இருந்து 13 பேர், கோவை மற்றும் திருச்சி சிறைகளில் இருந்து தலா 12 பேர் விடுதலையாகி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad