SDTU- தொழிற்சங்க மண்டல கூட்டம் மண்டல தலைவர் ஹைதர் இமாம் அவர்கள் தலமையில் மேலபாளைம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மண்டல செயலாளர் ராஜா முஹம்மது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் இந்த கூட்டத்தில் தூத்துக்குடி,நெல்லை,தென்காசி,கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதில் கீழ்கண்ட விசயங்கள் குறித்து பேசபட்டது..
1, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட முழுவதும் நலவாரியத்தில் உறுப்பினர்கள் அனைவரையும் இனைக்க வேண்டும் எனவும்.
2, உறுப்பினர்கள் சேர்க்கை அதிகபடுத்த மாவட்ட சார்பாக கேம்பியன் நடத்துவது எனவும்.
3, தொழிலாளர்களை நசுக்கும் வகையில் பெட்ரோல், டீசல்,கேஸ் விலைவாசிகளை உயர்ந்துள்ளதால் அதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.
4, திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் நான்கு வழி சாலை பணிகள் பல ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து சாலை பணிகளை உடனே நிறைவு செய்ய வேண்டும்SDTU நெல்லை மண்டலம் சார்பாக அதிகாரிகளுக்கு வலியுறுத்துகிறோம் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.
இறுதியாக நெல்லை மண்டல நல வாரிய பொறுப்பாளரும் கன்னியாகுமரி மாவட்ட தலைவருமாகிய லாயம் முகைதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக