காவேரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டதை தொடங்க வலியுறுத்தி நடை பயணத்தை தொடங்கினார், மரு.அன்புமணி ராமதாஸ். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

காவேரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டதை தொடங்க வலியுறுத்தி நடை பயணத்தை தொடங்கினார், மரு.அன்புமணி ராமதாஸ்.

299985183_2712750395536210_46245
தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு பா.ம.க. தலைவர்  அன்புமணி இராமதாஸ் பிரச்சார எழுச்சி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான இன்று ஒகேனக்கல்லில் உள்ள கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்து பார்வையிட்டு தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் நீராதாரம் இல்லை, மாவட்டத்தின் மொத்த வேளாண்மை நிலப்பரப்பில் 45 விழுக்காடு மட்டும் பாசன வசதி பெற்றுள்ளதாகவும், கிட்டத்தட்ட இதே அளவிலான மக்களுக்குத் தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும் வழங்கப்படுகிறது. 

299320637_2712751145536135_32396

இந்த சிக்கலுக்கான தீர்வு தான் தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டமாகும் என்றார், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும். அதேபோல், மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு, ஃபுளோரைடு அடர்த்தி குறையும். கூடுதலாக  15 லட்சம் மக்களுக்கு புளோரைடு கலக்காத குடிநீர் கிடைக்கும். அதன்மூலம் தருமபுரி மாவட்ட மக்களை தாக்கி வரும் ஃபுளுரோசிஸ் சிக்கலுக்கும் நிரந்தரத் தீர்வு காணமுடியும் என்றார்.

இதனால் மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும்; வேலைவாய்ப்பு பெருகும். தருமபுரி மாவட்ட மக்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டியிருக்காது. இத்தகைய சிறப்பான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த காலத்திலிருந்தே குரல் கொடுத்து வருவதாகவும். எனவே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒகேனக்கல் இருந்து பென்னாகரம், இண்டூர், தர்மபுரி, கடத்தூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார நடை பயணமாக சென்று கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

காவிரி ஆறு வழியாக சென்ற உபரிநீர் 35 நாட்களுக்குள் 161 டிஎம்சி தண்ணீர் வீனாக கடலில் கலந்துள்ளது. மூன்று டிஎம்சி நீரை தான் கேட்கிறோம் இதற்கு உண்டான திட்டத்தை நிறைவேற்றி ஏரி குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்புவதற்கு ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் இத்திட்டத்திற்கு அதிக அளவில் நிதி பங்கீடு அதிக அளவில் தேவையில்லை ரூ.800 கோடி மட்டும் தான் தேவைப்படும். 

298942151_1045390979453704_34891

இத்திட்டத்திற்காக பொதுமக்களிடம் 10,30,000 கையெழுத்து பெற்று மு.முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை. இந்த பிரச்சார நடைபயணம் என்பது அரசியலுக்காக அல்ல  இத் திட்டத்தை வலியுறுத்தி செயல்படுத்தும் வரை ஓயமாட்டேன். இத்திட்டத்தால் டெல்டா பாசன விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராத என தெரிவித்தார்.

Copy%20of%20Shepherds%20king%20music%20school 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad