இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கன மழையில் படகு இல்லம் ஏரியை சுற்றி இருந்த இரும்பு வேலி ராட்சச மரம் விழுந்து பாதிப்புக்கு உள்ளானது, ஏரியை சுற்றி உள்ள வேலி சரி செய்யப்படாத நிலையில், உதகை படகு இல்லம் செல்லும் சாலையிலிருந்து எரிக்குள் குப்பைகளை கொட்டுவது தற்போது வாடிக்கையாகி உள்ளது.
படகு இல்லம் ஏரி பல வருடங்களாக கழிவுகள் கலப்பதால் மாசு அடைந்து வரும் நிலையில் தற்போது குப்பைகள் கொட்டப்படுவது இயற்கை ஆர்வலர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. படகு இல்லம் நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி, குப்பைகள் சேராமல் நடவடிக்கை எடுப்பதோடு, ஏரியை சுற்றி உள்ள தடுப்பு வேலியை சீரமைத்து எரியின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்பாக உள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக