தாயகம் திரும்பியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

தாயகம் திரும்பியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்.

IMG-20220801-WA0058
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வாளவயல் கிராமத்தில் இன்று இலங்கை தாயகம் திரும்பிய மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. 


இதில் பந்தலூர் ரெப்கோ வங்கியின்  பேரவை பிரதநிதி திரு.கிருஸ்ணபாரதியார், அவர்கள் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய மக்களுக்காக தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கியில் (அ) வகுப்பு உறுப்பினர்களுக்கான பயன்கள் அதை எப்படி பெறவேண்டும். 


ரெப்கோ வங்கியினால் பெறகூடிய நன்மைகள் குறித்து பேசினார். மேலும் இலங்கை தாயகம் திரும்பியவர்கள் இதுநாள் வரை ரெப்கோ வங்கியில் (அ)வகுப்பு உறுப்பினர் ஆகாதவர்கள் உடனடியாக வங்கிக்கு சென்று உறுப்பினராகி பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad