சென்னை, கற்பக நகரில் உள்ள சுக சுகாதார பொதுநலச் சங்கம் நடத்திய 75வது சுதந்திர தின விழா மற்றும் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் காவல் ஆய்வாளர் திரு.K.காளிராஜ், திரு கார்த்திகேய திருநாவுக்கரசு, திருத்தங்கல் நாடார் கல்லூரி, உதவிப்பேராசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஜோ. சம்பத்குமார், டாக்டர் பால சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி சார்ந்த எழுச்சி உரையை வழங்கினார்கள்..
இந்நிகழ்வினை சுக சுகாதார பொது நலச்சங்கத் தலைவர் டாக்டர். மனோகரன், செயலாளர் பொன் சின்னத்துரை உள்ளிட்ட சங்க உறுப்பினர் பேராசிரியர் முனைவர் லோ. சந்திரசேகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வுகளும் சிறப்புற நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக