பொள்ளாச்சியில் கூட்டம் நிறைந்த பகுதியில் நகைக்கடையில் நகை எடுத்துக்கொண்டு திருடன் ஓட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஜூலை, 2022

பொள்ளாச்சியில் கூட்டம் நிறைந்த பகுதியில் நகைக்கடையில் நகை எடுத்துக்கொண்டு திருடன் ஓட்டம்.

202205051735467961_Tamil_News_Ta
கோவை மாவட்டம் பொள்ளாச்சி எஸ் எஸ் கோயில் வீதியில்  பொள்ளாச்சி நல்லி கவுண்டர் லே அவுட்டில் குடியிருக்கும் சுப்பிரமணியன் மகன் உதயகுமார் நகைக்கடை வைத்துள்ளார் சம்பவத்தன்று இரவு 8-30 மணி அளவில் இவர் கடைக்கு வாடிக்கையாளர் போல் கடைக்குள் வந்து தங்க செயின் வேண்டும் என்று வேண்டும் என்று கேட்க கடை உரிமையாளர் உதயகுமார் செயின் வகைகளை  காண்பித்தார்.


அந்த நபர் எதிரில் உள்ள ஷோகேஸில் உள்ள செயினை எடுக்கச் சொல்கிறார் உதயகுமார் செயின் எடுக்க திரும்பிய சமயம் பார்த்து கண் இமைக்கும் நேரத்தில் ஏற்கனவே அந்த நபருக்கு காண்பித்த இரண்டு செயின்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார், இதை சற்றும் எதிர்பாராத உதயகுமார் திருடன் திருடன் என்று சத்தம் போட்டுக் கொண்டு திருடனை துரத்திக் கொண்டு ஓட அருகில் இருந்த பொதுமக்களும் உதவிக்கு ஓடினார்கள்  ஓடிக்கொண்டிருந்த திருடன் கால் தடுக்கி விழுந்து விட்டான் கீழே விழுந்தவனை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பிடித்து விசாரித்ததில் கேரளா கொல்லம் இடிக்காடு போருவழி கிராமத்தில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் மகன் அஜய் வயது 43 என்று சொன்னான்.


தகவல் அறிந்த பொள்ளாச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர் உதயகுமாரிடமும் விசாரணை நடத்தி திருடனை கைது செய்தனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad