திருமுல்லைவாயலைச் சேர்ந்த போட்டோ ஷூட் நடத்தி வரும் இளமாறன்(23) என்பவர் இன்று காலை நிகழ்ச்சி ஒன்றுக்காக திருவல்லிக்கேணி வந்துள்ளார், நிகழ்ச்சி முடித்து பின் மெரினா கடற்கரைக்கு தனது நண்பர்களோடு சென்றபோது "நம்ம சென்னை" போர்டு பின்புறம் மர்ம நபர்கள் கத்தியால் இளமாறனின் கையை வெட்டி அவரது மொபைல் பறித்து சென்றனர்.
காயம்பட்ட இளமாறன் சிகிச்சைகாக ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியால் தாக்கி மொபைல் போன் பறித்துவிட்டு பின்பு பட்டாக்கத்தியை காட்டி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி செல்லும் மர்ம நபர்கள் குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக