விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "தளபதி விஜய் குருதியகம்" இரத்த தான செயலி அறிமுகம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 6 ஜூலை, 2022

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "தளபதி விஜய் குருதியகம்" இரத்த தான செயலி அறிமுகம்.

759035-vijy33
நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் மன்றம் சார்பில் அவரது ரசிகர்கள் பல்வேறு மக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள், லட்சக்கணக்கான இளைஞர்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலம், மக்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய "தளபதி விஜய் குருதியகம்" என்ற கைபேசி செயலியை (Mobile Application) உருவாக்கி உள்ளார். 

இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக இணைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் இரத்ததான சேவையை மக்களுக்காக வழங்க உள்ளனர். மேலும் இந்த செயலி, இரத்ததானம் கொடுக்க முன்வருபவர்கள் (Volunteers) இணைந்து கொள்ள முடியும், இதன் மூலம் பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக இருக்கும், இரத்தம் தேவைப்படும் நபர்கள் இந்த கைபேசி  செயலி மூலம், "தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்" விலைமதிப்பற்ற பல உயிர்களை காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வழங்கி வழிநடத்த இந்த செயலி துணைநிற்கும் என்பதையும், தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் இருக்கும்.


விஜய் மக்கள் இயக்கத்தின் இணையதளம் இத்தோடு இதே நன்னாளில் தளபதி விஜய் மக்கள் அதிகாரப்பூர்வமான முகநுால், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ட்விட்டர், யூ ட்யூப், இணையதளம், (Facebook, Instagram, Twitter, Youtube Channel & Website) பக்கங்களையும் உருவாக்கியுள்ளனர்.

WhatsApp%20Image%202022-07-06%20at%205.16.10%20PMஇவ்விழாவில் அனைத்து மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad