சிவகங்கையில் விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ரூ 24,49,900 வழங்கியதுடன், அவரது குழந்தைகளின் படிப்பு செலவிற்கும் உதவியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்துள்ள அம்பட்டையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி. இவர் சிவகங்கை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்துவந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இரவு பணிமுடித்து சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது வாகனம் நிலை தடுமாறி நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்நிலையில், இவருடன் கடந்த 2011ஆம் ஆண்டு குழுவை சேர்ந்த சக காவலர்கள் ஒன்றிணைந்து 'காக்கி உதவும் கரங்கள்' என்கிற அமைப்பை துவக்கி அதன் மூலம் சக காவலர்களுடன் ஒன்றிணைந்து ரூ24,49,900 சேகரித்து சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி செந்தில்குமார் முன்னிலையில் அலெக்ஸ்பாண்டியின் மனைவி இலக்கியாவிடம் அதற்கான காசோலையை வழங்கினர்.
மேலும், அவர்களது பெண் குழந்தைகளான சாதனாஸ்ரீ மற்றும் அலெக்சியா ஸ்ரீ ஆகியோரது பெயரில் படிப்பு செலவிற்காகவும் உதவி தொகையை நிரந்தர வைப்பு நிதியில் செலுத்தி அதற்கான பத்திரத்தையும் வழங்கினார்கள். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக