அங்கன்வாடி பள்ளிக்கு மின்விசிறி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய தேமுதிகவினர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 மே, 2022

அங்கன்வாடி பள்ளிக்கு மின்விசிறி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய தேமுதிகவினர்.

IMG-20220506-WA0085
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு தேமுதிக சார்பில் மின்விசிறி மற்றும் விளையாட்டு உபகரணங்கள், பிஸ்கட்டுகள் வழங்கும் விழா. பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் 15 குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் விழா.இந்த விழாவில் பள்ளிபாளையம் நகர கழக செயலாளர் திரு. வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.டி.எஸ் விஜய் சரவணன் அவர்கள் முன்னிலை வகித்து குழந்தைகளுக்கு நல உதவிகளை வழங்கினார். 

IMG-20220506-WA0086
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் மகாலிங்கம, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் கோபி, மாவட்ட நெசவாளர் அணி துணைச் செயலாளர் முனியப்பன், மாவட்ட பிரதிநிதி நாகராஜ், வார்டு  செயலாளர் முருகன், வார்டு அவைத்தலைவர் அகிலன் மற்றும் தேமுதிக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad