மாநில பொதுச்செயலாளர், சேரலாதன், மாநில பொருளாளர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.பொதுக்குழு கூட்டத்தில் 30 மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர், பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவர் B.ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் M.K.சுகந்தா, மாவட்ட பொருளாளர் M.சிங்காரம், மாவட்ட துணைத்தலைவர் சித்ரா, மாவட்ட இணைச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் சிங்காரம் அனைவருக்கும் நன்றி கூறினார். பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரிந்து சங்க செயல்பாடுகளின் காரணமாக பழிவாங்கும் நோக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு.மீண்டும் பணியமைர்த்தப்பட்ட சங்க நிர்வாகிகள் சேரலாதன்,சக்திவடிவேல்,சாந்தி உள்ளிட்ட 16 ஊழியர்களுக்கு பணிமூப்பை வரன்முறை செய்திட வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.
- நடமாடும் நம்பிக்கை மையம், குருதிவங்கி ஆகியவற்றில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு 10 ஆண்டுகளாக வழங்கப்படமால் உள்ளது.ஆந்திரா ,தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ரூ. 21000 /- ஊதியம் வழங்கப்படுகிறது எனவே நடமாடும் நம்பிக்கை மைய ஓட்டுனர் ,உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.
- நாமக்கல் மாவட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட கேட்டுக்கொள்கிறோம்.
- நாமக்கல் மாவட்ட மேற்பார்வையாளர் ஊழியர்களிடம் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி பேசுவதை நிறுத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் NACP V ( pay Revision) ஊதிய மாற்றத்தை மத்திய அரசு அமல்படுத்திட வேண்டும்.
- அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.
- ஊழியர்களுக்கு பணிதிறன் மதிப்பீட்டு( Appraisal) முறையை மத்திய அரசு இரத்து செய்திட வேண்டும்.
- தொழில் தகராறு( மத்திய) விதிமுறைகள் ,1957- யின் விதி 61(1) ன் படி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் மற்றும் தலைமைகுழு உறுப்பினர்களை பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களாக (PROTECTED WORKMAN) என அங்கீகரிக்க வேண்டும்என கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்திரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் இறந்துவிட்டால் எந்தவொரு இழப்பீட்டு தொகையும் வழங்கப்படுவதில்லை.எனவே அரசாணை எண்.58ன்படி ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5,00,000 வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- கொரானா தொற்று பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணிபுரிந்த எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.
- தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அவுட் சோர்சிங் ஊழியர்களை TANSACS - ஊழியர்களாகமாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழக அரசின் அரசாணை எண் (நிலை):151 தேதி; 16-10-2008 ன்படி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்று திறனாளிகள் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக