திருப்பூரில் வீடு நிலம் அபகரிக்க முயற்சி கவுன்சிலர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைகேட்பு நாள் நடைபெறும்.
இந்நிலையில் 9/5 /20 22இன்றுதிங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைகேட்பு நாள் நடைபெற்றது இதில் திருப்பூர்பொங்கலூர் தொங்குட்டிபாளையம் ஊராட்சி டி ஆண்டி பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி கார்த்திகா இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தொங்குட்டிபாளையம் ஊராட்சி 7வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு மொத்த ஓட்டு 480ல்400ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சிலர் இவரது நிலம் வீடுகளை அரசு அதிகாரிகள் உதவியோடு போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித் இ.ஆ.ப அவர்களிடம் மனு கொடுத்தனர் பிறகு வெளியே வந்த அவர்கள் குடும்பத்துடன் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர் அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த வீரபாண்டி காவல் நிலையகாவல் அதிகாரிகள் ,பெண் காவலர்கள் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக