கிருஷ்ணகிரி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தில் இணைந்தனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மே, 2022

கிருஷ்ணகிரி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தில் இணைந்தனர்.

WhatsApp%20Image%202022-05-15%20at%208.20.17%20PM
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நல்லூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் இணைந்தனர் .


மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வேளியேறும் இரசாயன நீரால் நுரை தள்ளியவாறு உபரி நீர் வேளியேறுவதால் விவசாயம் பாதிப்படைவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறினார்.

WhatsApp%20Image%202022-05-15%20at%208.20.01%20PMமேலும் அவர் கூறுகையில் இதே போன்ற நிலைமைகளில் தண்ணீர் வெளியேறிக்கொண்டு இருந்தால், மாவட்ட நிர்வாகமும், அரசும் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சார்பில் பல ஆயிரம் விவசாயிகள் ஒன்றிணைந்து  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என  தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டதிற்க்குட்பட்ட சூளகிரி, வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad