இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லட்சுமி தனது கணவருக்கு போன் செய்து, குடும்ப செலவிற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், லட்சுமியை தினகரன் திட்டியுள்ளார் இதனால், மனமுடைந்த லட்சுமி அழுது கொண்டு வீட்டிற்குள் ஓடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மயக்க நிலையில் இருந்தவரை வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் லட்சுமி இறந்து விட்டதாக கூறினார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக