மழை வேண்டி ஒருத்தரை ஒருத்தர் துடைப்பத்தால் அடித்து கொள்ளும் வினோத திருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 4 மே, 2022

மழை வேண்டி ஒருத்தரை ஒருத்தர் துடைப்பத்தால் அடித்து கொள்ளும் வினோத திருவிழா.

 IMG-20220504-WA0027ஆண்டிபட்டி அருகே மழை பெற வேண்டியும், மாமன் மச்சான் உறவு வலுப்பெற துடைப்பத்தால் அடிக்கும் வினோத திருவிழா.



மறவபட்டியில் உள்ள முத்தாலம்மன்கோவில் திருவிழாவை முன்னிட்டு மாமன் மச்சான் உறவு வலுப்பெற துடைப்பத்தால் அடித்து விநோத நேத்திக்கடன்களை செலுத்தினார்கள்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டி , தீசட்டி, பால் குடம், காவடி எடுத்து நேத்திக்கடன்களை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.

இது குறித்து ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் பிரபு கூறுகையில்,

இவ்விழா , ஒரு முக்கிய விழாவாக தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மூன்று நாள் நடைபெறும் விழாவில் அம்மனுக்கு கரகம் எடுத்து வந்து அபிஷேக ஆரதனைகள் நடைபெறும். விழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் உள்ள உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். மாமன் மைத்துனர்களிடையே ஏற்பட்டுள்ள விரிசல்களை தவிர்க்கவும் அனைவரும் ஒன்று கூடி அம்மனை வழிபட்டு சேத்தாண்டி வேசமிட்டு, ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் மாறி, மாறி அடித்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இதன் மூலம் உறவுகளிடையே ஒற்றுமை வலுப்பெறும் என்ற ஐதீகம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.

IMG-20220504-WA0028

இதில் தாய்மார்களுக்கும் , வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கும் தொந்தரவு செய்வது இல்லை. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் முளை பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலைய அடையும் என்று கூறினார்.


இந்த விநோத நிகழ்ச்சியினை கான மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad