தமிழகத்தில் 2026ல் பா.ம.க. மாடல் ஆட்சி! டாக்டர் அன்புமணி இராமதாஸ் பேச்சு!! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 15 மே, 2022

தமிழகத்தில் 2026ல் பா.ம.க. மாடல் ஆட்சி! டாக்டர் அன்புமணி இராமதாஸ் பேச்சு!!

WhatsApp%20Image%202022-05-15%20at%208.45.36%20PM
எங்களிடம் அதிகாரத்தை கொடுங்கள் தமிழகத்தில் பாட்டாளி மாடல் ஆட்சியை நாங்கள்நடத்துவோம் என்று தர்மபுரியில் நடந்த பா.ம.க. பொதுக் குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம். பி. தெரிவித்தார்.

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க.பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ, பாமக மாநில துணைதலைவர்  பாடி செல்வம், சாந்த மூர்த்தி, இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, பசுமைத்தாயகம் மாது, மாவட்டத்தலைவர் இமயவர்மன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நம்பிராஜன் வணங்காமுடி, பாட்டாளி தொழிற் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் தகடூர் ரவி, இளைஞர் சங்க மாநில துணைத் தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்றார். முன்னாள் எம்.பிக்கள் டாக்டர் செந்தில், பாரி மோகன், உழவர் பேரியிக்க தலைவர் வேலுசாமி,  வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், மாவட்ட அமைப்புச் செயலாளர் சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை வழங்குங்கள், தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் இல்லாத மது விலக்கை அமல்படுத்தப்படும், இலவசக்கல்வி, இலவச மருத்துவம், விவசாய விளைபொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்து கொள்ளும் நிலை ஆகியவையே பாட்டாளி மாடலாகும்.


கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் மூத்த நிர்வாகிகள் உடன் இணைந்து தீவிர களப்பணியாற்ற வேண்டும். வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி  அமைக்கும். இதற்காக பல்வேறு திட்டங்களை நாம் வகுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad