12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்த அம்மோநைட்ஸ் புதைபடிவங்களை ஆட்சியரிடம் வழங்கினார் ஆராய்சியாளர்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 மே, 2022

12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்த அம்மோநைட்ஸ் புதைபடிவங்களை ஆட்சியரிடம் வழங்கினார் ஆராய்சியாளர்கள்.

WhatsApp%20Image%202022-05-08%20at%206.29.56%20PM

சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்த அம்மோநைட்ஸ் எனப்படும்  கடல்சார் உயிரினங்கள் குறித்த சிறப்பு அருங்காட்சியகத்திற்கு  புதைபடிவங்களை புதைபடிவ ஆராய்ச்சியாளர்  ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் வழங்கினார்.


பெரம்பலூர்.மே.9.கடல்சார் உயிரினங்கள் மற்றும் புதைபடிவங்கள் குறித்து ஆராய்ச்சியாளர் நிர்மல்ராஜ்  பல்வேறு நாடுகளில் கண்டுபிடித்த அரிய வகை கடல்சார் உயிரினங்களின் படிவங்கள், எச்சங்களை  பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக உருவாகவுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர்   ஸ்ரீவெங்கட பிரியா  அவர்களிடம்  வழங்கினார்.


இந்நிகழ்வில் சார்ஜா மியூசியம் எஜீகேஷனல் நிறுவுன இயக்குநரும்,  புதைப்படிவ ஆராய்ச்சியாளருமான நிர்மல்ராஜ்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூர் பகுதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்தது. அப்போது வாழந்து வந்த கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியன காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின. புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது, இப்படிமங்களின் முக்கியத்துவம் குறித்து உலகிற்குத் தெரியவந்தது. சாத்தனூரில் கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். 


“கோனிபர்ஸ்” வகையைச் சார்ந்த (பூக்கள் தோன்றாத) இந்த அடிமரம் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த புகழ்பெற்ற புவியியலாளர் டாக்டர்.M.S.கிருஷ்ணன் அவர்களால் 1940-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.அதுமட்டுமல்லாது சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரனமான அம்மோநைட்ஸ் எனப்படும் நத்தைபோன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிவங்கள் நமது பெரம்பலுார் மாவட்டத்தில்  அதிக அளவு கிடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முயற்சியால் பெரம்பலுார் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மோநைட்ஸ் படிவங்களுக்கென்றே பிரத்யேக அருங்காட்சியகம் அமைப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கடல்சார்  உயினங்கள் குறித்தும், புதை படிவங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்யும் பணியில் உள் ளநான் என்னிடமுள்ள மடகாஸ்கார் நாட்டில் சுமார் 10 முதல் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினங்களின் (AMMONITES) தலைக்காலி 5 படிவங்கள், பொலிவியா நாட்டில் 40 முதல் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆழ்கடல் பூச்சி வகை எச்சங்கள் (TRILOBITES) 1  படிவம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் காரை பகுயில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கடல் சுராவின் பல் படிவங்கள் போன்றவற்றை  பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக உருவாகவுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் வழங்கியுள்ளேன். 


இந்தியாவிலேயே அம்மோநைட்ஸ் எனப்படும் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்த கடல்சார்உயிரினத்திற்கென்று பிரத்யேக அருங்சாட்சிகயம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை.  இவ்வாறு தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad